TNPSC Thervupettagam

15வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்

July 31 , 2018 2313 days 681 0
  • வதோதராவின் மன்ஜல்பூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 15-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
  • இந்திய தடகள சங்கத்தின் கீழ் இயங்கும் குஜராத் மாநில தொழில்சாரா தடகள கூட்டமைப்பு இப்போட்டியை நடத்தியது.
  • இப்போட்டியில் தன்வீர் மற்றும் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் பெற்றவரான அபர்ணா ராய் ஆகியோர் ‘சிறந்த தடகள வீரர்களாக’ அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • அணிகளுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை ஹரியானா வென்றுள்ளது. இதில் கேரளா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • ஹரியானாவின் தடகள வீரர் மோஹித் குமார் ஆண்களுக்கான டெக்கத்லானில் 6707 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த வருடம் சங்வான் 6618 புள்ளிகள் பெற்றார்.
  • போல்வால்ட்டில் 4.90 மீ உயரம் தாண்டிய இளைஞரான ராகேஷ் கோண்ட் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2017ஆம் ஆண்டு கன்ஹய்யா சிங் 475 மீ உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.
  • பஞ்சாபின் குண்டெறிதல் வீரரான தன்வீர் சிங் தனது ஐந்தாவது முயற்சியில் 19.69 மீ தூரத்திற்கு குண்டை எறிந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 2011ஆம் ஆண்டு 19.34 மீ தூரத்திற்கு நவ்தேஜ்தீப் சிங் குண்டெறிந்ததே சாதனையாக இருந்தது.
  • கேரளாவின் விஷ்ணுப்பிரியா பெண்களுக்கான 400 மீ தடை ஓட்டத்தில் 1:02.52 வினாடிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
  • இதற்கு முன் 2015ஆம் ஆண்டு PO சன்யா 1 : 02.58 வினாடிகளில் 400 மீ தடை ஓட்டத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்