பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது 15வது நிதி ஆணையத்தின் பதவிக் காலத்தை 2019 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான நிதிகளையும் உள்ளடக்க நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் வரம்பை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.
2014-19 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு நிதி மற்றும் பட்ஜெட் சீர்திருத்தங்கள் காரணமாக இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிதி ஆணையம் பற்றி
15வது நிதி ஆணையமானது குடியரசுத் தலைவரின் ஆணையால் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் N.K. சிங் தலைமையில் அமைக்கப்பட்டது.
இது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 5 ஆண்டு காலகட்டத்திற்கு மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையேயான நிதிப் பங்கீடுகளுக்கான விதிமுறைகள் குறித்து முடிவெடுக்கும்.