மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வரிவருமானப் பகிர்வீடு தொடர்பான 15வது நிதிக்குழுவின் விதிமுறைகள் மற்றும் குறிப்புகளில் புதுச்சேரியை மத்திய அரசு உள்ளடக்கியுள்ளது.
இதுநாள் வரை யூனியன் பகுதிகள் என்றழைக்கப்படும் மத்திய ஆட்சிப் பிரதேசங்கள் நிதிக்குழுவின் வரம்பிற்குள் சேர்க்கப்படாமல் இருந்து வந்தன. ஆனால் தற்போது மத்திய அரசு புதுச்சேரியை நிதிப்பகிர்வீடு தொடர்பான விஷயத்தில் மற்ற மாநிலங்களுக்கு இணையாக நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த அனுமதியின் மூலம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 42 சதவிகித அளவிலிருந்து யூனியன் பிரதேசங்கள் தமது பங்கை பெற முடியும்.