TNPSC Thervupettagam

15வது வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு

September 5 , 2022 684 days 376 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் தேசியப் புள்ளியியல் அலுவலகமானது இந்த அறிக்கையினை வெளியிட்டது.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாதங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதமானது நகர்ப்புறங்களில் 8.2% அளவாக இருந்தது.
  • கடந்த 4 ஆண்டுகளில் பதிவான குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் இதுவாகும்.
  • தேசியப் புள்ளியியல் அலுவலகமானது, 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பை (PLFS) வெளியிடத் தொடங்கியது.
  • வேலையின்மை அல்லது வேலை வாய்ப்பியின்மை விகிதம் என்பது தொழிலாளர் வளத்தில் உள்ள வேலையில்லாத நபர்களின் சதவீதம் என வரையறுக்கப்படுகிறது.
  • நடப்பு வாராந்திர நிலையில் நகர்ப்புறங்களில் மட்டும் மூன்று மாத இடைவெளியில் முக்கிய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மைக் குறிகாட்டிகளை (அதாவது தொழிலாளர் மக்கள் தொகை விகிதம், தொழிலாளர் பங்கேற்பு விகிதம், மற்றும் வேலை வாய்ப்பின்மை விகிதம்) மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆண்டுதோறும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வழக்கமான நிலை மற்றும் தற்போதைய வாராந்திர நிலை ஆகிய இரண்டிலும் வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை குறிகாட்டிகளை மதிப்பிடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நடப்பு வாராந்திர நிலையின் கீழ், ஒரு நபர் ஒரு வாரத்தில் எந்தவொரு நாளிலும் ஒரு மணி நேரம் கூட வேலை செய்யாமல், ஆனால் அந்த காலக் கட்டத்தில் எந்தவொரு நாளிலும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் கூட வேலை தேடினால் அல்லது வேலை செய்யத் தயாராக இருந்தால் அவர் வேலையற்றவராகக் கருதப்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்