TNPSC Thervupettagam

16வது நிதிக் குழுவிற்கான உத்தேச திட்டம்

July 7 , 2024 11 days 151 0
  • 16வது நிதி ஆணையம் தனது பணியைத் தொடங்கியுள்ளது என்பதோடு இது முதன்மையாக ஒன்றிய தொகுப்பு நிதியைப் பகிர்ந்தளிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
  • இது இந்திய அரசியலமைப்பின் 280வது சரத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • 2021 மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள் இல்லாத நிலையில், 2011 ஆம் ஆண்டின் தரவுகளை முதன்மையாக நம்பியிருப்பது ஆதார அடிப்படையிலான ஒரு நிதிப் பகிர்வுக்குப் போதுமானதாக இல்லை.
  • இந்தியாவில் தோராயமாக 4,000 சட்டப்பூர்வ நகரங்கள் மற்றும் அதற்குச் சமமான எண்ணிக்கையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையிலான நகரங்களும் தோராயமாக 23,000 கிராமங்களும் உள்ளன என்பதோடு இவை அனைத்தும் திறம்பட்ட நகர்ப்புறமாக உள்ளன.
  • 2 ஆம் மற்றும் 3 ஆம் அடுக்கு நகரங்களுக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இடம்பெயர்வு உட்பட இந்தப் புள்ளிவிவரங்கள் 16வது நிதிக் குழுவால் பரிசீலிக்கப்பட வேண்டும்.
  • இந்தியாவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் (ULBs) அரசுகளுக்கும் இடையேயான  நிதி பரிமாற்றங்கள் (IGTs) ஜிடிபியில் 0.5% மட்டுமே ஆகும்.
  • இது மற்ற வளரும் நாடுகளில் உள்ள வழக்கமான 2-5% ஐ விட மிகக் குறைவு.
  • உதாரணமாக, தென்னாப்பிரிக்கா (2.6%), மெக்சிகோ (1.6%), பிலிப்பைன்ஸ் (2.5%) மற்றும் பிரேசில் (5.1%) ஆகிய நாடுகள் அதன் குறிப்பிட்ட நிதியை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தங்கள் நகரங்களுக்கு ஒதுக்குகின்றன.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு குறிப்பிட்டச் சதவீதமாக IGTகளின் அளவை அதிகரிப்பது அவசியம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்