16வது நிதி ஆணையம் தனது பணியைத் தொடங்கியுள்ளது என்பதோடு இது முதன்மையாக ஒன்றிய தொகுப்பு நிதியைப் பகிர்ந்தளிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
இது இந்திய அரசியலமைப்பின் 280வது சரத்தின் கீழ் நிறுவப்பட்டது.
2021 மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள் இல்லாத நிலையில், 2011 ஆம் ஆண்டின் தரவுகளை முதன்மையாக நம்பியிருப்பது ஆதார அடிப்படையிலான ஒரு நிதிப் பகிர்வுக்குப் போதுமானதாக இல்லை.
இந்தியாவில் தோராயமாக 4,000 சட்டப்பூர்வ நகரங்கள் மற்றும் அதற்குச் சமமான எண்ணிக்கையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையிலான நகரங்களும் தோராயமாக 23,000 கிராமங்களும் உள்ளன என்பதோடு இவை அனைத்தும் திறம்பட்ட நகர்ப்புறமாக உள்ளன.
2 ஆம் மற்றும் 3 ஆம் அடுக்கு நகரங்களுக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இடம்பெயர்வு உட்பட இந்தப் புள்ளிவிவரங்கள் 16வது நிதிக் குழுவால் பரிசீலிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் (ULBs) அரசுகளுக்கும் இடையேயான நிதி பரிமாற்றங்கள் (IGTs) ஜிடிபியில் 0.5% மட்டுமே ஆகும்.
இது மற்ற வளரும் நாடுகளில் உள்ள வழக்கமான 2-5% ஐ விட மிகக் குறைவு.
உதாரணமாக, தென்னாப்பிரிக்கா (2.6%), மெக்சிகோ (1.6%), பிலிப்பைன்ஸ் (2.5%) மற்றும் பிரேசில் (5.1%) ஆகிய நாடுகள் அதன் குறிப்பிட்ட நிதியை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தங்கள் நகரங்களுக்கு ஒதுக்குகின்றன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு குறிப்பிட்டச் சதவீதமாக IGTகளின் அளவை அதிகரிப்பது அவசியம்.