16வது நிதி ஆணையக்குழு எதிர் கொள்ள உள்ள முக்கிய சவால்கள்
November 22 , 2024 54 days 100 0
இயற்கைப் பேரிடர்களின் தாக்கம், முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு, விரைவான நகரமயமாதலால் ஏற்படும் தேவைகள் ஆகிய மூன்று முக்கிய முதன்மை சவால்களை தமிழ்நாடு மாநிலம் எதிர் கொண்டு வருகிறது.
நிதி ரீதியாக இந்தச் சவால்களை மாநில அரசு சமாளிக்க உதவும் சில பரிந்துரைகளை வழங்குமாறு 16வது நிதி ஆணையத்திடம் அரசு கோரியுள்ளது.
தமிழ்நாட்டின் மக்கள்தொகையின் சராசரி வயது ஆனது, தற்போது சுமார் 36.4 ஆக உள்ளதோடு. இது உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடும்போது 9.5 ஆண்டுகள் அதிகமாகும்.
16வது நிதி ஆணையத்தின் பதவிக் காலம் முடிவடையும் போது, தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் சராசரி வயது 38.5 ஆக இருக்கும்.
அதற்குள் நாட்டிலேயே மிகவும் அதிக முதியோர்களைக் கொண்ட ஒரு மாநிலமாக தமிழகம் உருவாகும்.