சமீபத்தில், மத்திய அரசானது அரவிந்த் பனகாரியாவை 16வது நிதிக்குழுவின் தலைவராக நியமித்தது.
தற்போது அந்த ஆணையத்தின் மூன்று முழுநேர உறுப்பினர்களையும் ஒரு பகுதி நேர உறுப்பினரையும் நியமிப்பதாக அறிவித்துள்ளது.
15வது நிதி ஆணையத்தின் உறுப்பினராக இருந்த முன்னாள் நிதி மற்றும் செலவினத் துறை செயலாளர் அஜய் நாராயண் ஜா இந்த ஆணையத்தின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்னி ஜார்ஜ் மேத்யூவுடன் நிரஞ்சன் ராஜத்யக்சாவும் இதன் முழுநேர உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.
சௌமியா காந்தி கோஷ் இந்த ஆணையத்தில் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.
ஜா, 14வது நிதி ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
16வது நிதிக்குழு தனது பரிந்துரைகளை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் ஐந்து ஆண்டு காலச் செயல்பாட்டுக் காலத்தை உள்ளடக்கியது.