TNPSC Thervupettagam

16வது நிதி ஆணையத்திற்கான மதிப்பீட்டு வரையறைகள் (2026-2031)

December 7 , 2023 225 days 169 0
  • சமீபத்தில், மத்திய அமைச்சரவையானது 16 வது நிதி ஆணையத்திற்கான மதிப்பீட்டு வரையறைகளுக்கு (ToR) சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள வரவிருக்கும் ஐந்தாண்டு காலத்திற்கு, மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வருவாய்ப் பகிர்வுக்கான சூத்திரத்தைப் பரிந்துரைக்கும் முக்கியமான பொறுப்பை இந்த ஆணையம் கொண்டு உள்ளது.
  • பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் ஆனது 2025-26 நிதியாண்டு வரை செல்லுபடியாகும்.
  • இந்த ஆணையம் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரையில் அரசு காலக்கெடு விதித்துள்ளது.
  • மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே நிகர வரி வருவாயைப் பகிர்ந்தளிப்பது மற்றும் அத்தகைய வருவாயில் ஒவ்வொரு மாநிலங்களின் பங்கை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்வது ஆகியவை இந்த ஆணையத்தின் முக்கியப் பரிந்துரைகளாகும்.
  • அந்தந்த மாநிலங்களின் நிதி ஆணையங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மாநில அரசின் தொகுப்பு நிதியைப் பெருக்கத் தேவையான நடவடிக்கைகளையும் இந்த ஆணையம் பரிந்துரைக்கும்.
  • இந்தியாவின் ஒருங்கிணைந்த தொகுப்பு நிதியிலிருந்து மாநிலங்களின் வருவாய் மானியங்கள் மூலம் மாநிலங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைகளை நிர்வகிக்கும் கொள்கைகள் மற்றும் மானியங்கள் மூலம் மாநிலங்களுக்குச் செலுத்தப்படும் தொகைகளை வகுத்தல் சார்ந்த கொள்கைகள் ஆகியவற்றையும் இந்த ஆணையம் பரிந்துரைக்கும்.
  • மேலும், இந்த ஆணையம் பேரிடர் மேலாண்மை முன்னெடுப்புகளுக்கு நிதியுதவி செய்வதில் தற்போதுள்ள விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து அதற்குத் தகுந்தப் பரிந்துரைகளை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்