TNPSC Thervupettagam

16வது பங்குதாரர்கள் மாநாட்டின் முடிவுகள்

November 8 , 2024 14 days 95 0
  • உயிரியல் பன்முகத் தன்மை உடன்படிக்கை மீதான 16வது பங்குதாரர்கள்  மாநாடு என்பது கொலம்பியாவின் காலியில் நடைபெற்றது.
  • பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான விவாதங்களில் பல பழங்குடியினக் குழுக்களைச் சேர்ப்பதற்கான அமைப்பை நிறுவச் செய்வதற்கான முன்மொழிவினை இது ஏற்றுக் கொண்டது.
  • பலதரப்பு நெறிமுறைக்கான திட்டங்களுடன், மரபணு தரவுகளின் பயன்பாட்டிலிருந்து பெறப்படும் நியாயமான பலன் பகிர்வு பற்றிய பல விவாதங்கள் இன்னும் தீர்க்கப் படாமால் உள்ளன.
  • பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான தொழில்நுட்ப ஆதரவு, ஊடுருவல் இனங்கள் குறித்த பல பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கம்-பருவநிலை ஒருங்கிணைப்பை மேம்படுத்த ஒப்புக் கொள்ளப் பட்டது.
  • மறுபுறம், பல்லுயிர்ப் பெருக்கம் சார்ந்த பல இலக்குகளுக்கு ஆண்டுதோறும் தேவைப் படும் மதிப்பிடப்பட்ட 200 பில்லியன் டாலரில் ஒரு பகுதியே வழங்க உறுதியளிக்கப் பட்டுள்ளது.
  • ஆனாலும் DSI நிதிக்கான பங்களிப்புகள் அல்லது நிதி மற்றும் தொழில்நுட்ப வள ஒதுக்கீட்டிற்கான வழிமுறைகள் மீது ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
  • KMGBF இலக்குகள் பிணைப்பு சாராமல் உள்ளன என்ற ஒரு நிலைமையில் இது இந்த இலக்குகளுக்கான உலகளாவிய உறுதிப்பாடுகளைப் பாதிக்கக் கூடும்.
  • இந்தியா 2025-30 ஆம் ஆண்டு முதல் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் வளங்காப்பிற்காக 81,664 கோடி ரூபாய் செலவாகும் என்ற மதிப்பிடலுடன் புதுப்பிக்கப்பட்ட பல்லுயிர்ப் பெருக்கத் திட்டத்தை முன்வைத்தது.
  • இந்த மாநாடு ஆனது 2022 ஆம் ஆண்டில் கனடாவின் மாண்ட்ரியலில் நடைபெற்ற கூட்டங்களைத் தொடர்ந்து நடைபெற்றது.
  • அந்தச் சந்திப்பில், 2030 ஆம் ஆண்டிற்குள் 30% நிலம் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாக்க நாடுகள் ஒப்புக் கொண்டன என்ற நிலையில் இது ‘30-by-30 ஒப்பந்தம் என்று அழைக்கப் படுகிறது.
  • இந்த இலக்குகளில் ஊடுருவக் கூடிய அயல் இனங்களின் அறிமுகத்தைச் சுமார் 50% அளவிற்கு குறைப்பதும், 2030 ஆம் ஆண்டிற்குள் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்