TNPSC Thervupettagam

16 ஆம் நூற்றாண்டு தெலுங்கு கல்வெட்டுகள்

January 10 , 2024 322 days 281 0
  • பலுட்லாவில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் உள்ள போலேரம்மா (உள்ளூர் கிராம தெய்வம்) கோவிலுக்கு அருகில் 16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த இரண்டு தெலுங்கு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ள இவை அக்ஷய, ஸ்ரவண, சூ10 ஆகிய சுழற்சி ஆண்டுகளில் தேதியிடப் பட்டுள்ள கி.பி. 16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த எழுத்துருக்களைக் கொண்டிருக்கின்றன.
  • குராசால் பகுதியினைச் சேர்ந்த லிங்கபத்துவின் மகன் ஜங்கம், போலேரம்மா தேவிக்கு அர்ப்பணித்த படைப்புத் தூண்களை (உய்யல-கம்பலு) கட்டமைத்ததை இந்தக் கல்வெட்டுகளுள் ஒன்று குறிப்பிடுகிறது.
  • மற்றொரு கல்வெட்டு (அதில் எழுத்துக்கள் தெளிவாக இல்லை), புலியுடன் சண்டையிடும் வீரனைக் குறிப்பது போல் தென்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்