இந்தச் சிறுகோளானது முழுவதுமாக உலோகத்தால் செய்யப் பட்டிருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் படங்கள், இந்தச் சிறுகோளின் மேற்பரப்பானது பூமியின் உட்புற மையத்தைப் போலவே பெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றைக் கொண்டிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது .
இது தங்கம், கோபால்ட், பிளாட்டினம், ரெனியம் மற்றும் இரிடியம் போன்ற அரிய உலோகங்களாலும் ஆனது.
இது செவ்வாய்க் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள சிறுகோள் பட்டையில் சுற்றுகின்ற ஒரு சிறுகோளாகும்.
இது சைக் (Psyche) எனும் பண்டைய கிரேக்க பெண் தெய்வத்தின் ஆன்மாவின் பெயரைக் கொண்டுள்ளது.