TNPSC Thervupettagam

16 புதிய உலகளாவியப் புவிசார் பூங்காக்கள் – யுனெஸ்கோ

April 24 , 2025 17 hrs 0 min 62 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, ஏப்ரல் 17 ஆம் தேதியன்று 11 நாடுகளில் உள்ள 16 புதிய தளங்களை இந்த ஆண்டு அதன் 10வது ஆண்டு நிறைவை நன்கு குறிக்கின்ற அதன் உலகளாவிய புவிசார் பூங்காக்கள் வலையமைப்பில் சேர்த்துள்ளது.
  • இந்த வலையமைப்பில் புதிதாக இடம் பெற்றுள்ள புவிசார் பூங்காக்கள் சீனா, வட கொரியா, ஈக்வடார், இந்தோனேசியா, இத்தாலி, நார்வே, தென் கொரியா, சவுதி அரேபியா, ஸ்பெயின், ஐக்கியப் பேரரசு மற்றும் வியட்நாம் ஆகிய சில நாடுகளில் அமைந்துள்ளன.
  • வட கொரியாவின் தளமானது இந்த வலையமைப்பில் சேர்க்கப்பட்டதன் மூலம், அதன் வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய பதிவினைப் பெற்றுள்ளது.
  • சவுதி அரேபியா புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு புவிசார் பூங்காக்களுடன் இந்தப் பட்டியலில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது.
  • புதிய உள்ளீடுகளுடன், இந்த வலையமைப்பானது தற்போது சுமார் 50 நாடுகளில் 229 தளங்களைக் கொண்டுள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பின் உலகளாவியப் புவிசார் பூங்காக்கள் பட்டியலில் இதுவரை எந்த இந்தியத் தளமும் இடம் பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்