16வது BRICS உச்சி மாநாடு ஆனது, ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு, BRICS உச்சி மாநாட்டையொட்டி, நடைபெற்ற அதிபர் ஜி ஜின்பிங் உடனான இருதரப்புச் சந்திப்பில் இந்தியா பங்கேற்றது.
BRICSசின் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸும் கலந்து கொண்டார்.
இந்த உச்சி மாநாடு கசான் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதுடன் முடிவடைந்தது.
முதல் BRIC உச்சி மாநாடு ஆனது, 2009 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் நகரில் நடைபெற்றது.
2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்ற BRIC அயல் உறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தென்னாப்பிரிக்கா அதன் முழு உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் மூலதனத்துடன் புதிய மேம்பாட்டு வங்கி (NDB) ஆனது நிறுவப்பட்டது.
2024 ஆம் ஆண்டில், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய சில புதிய உறுப்பினர்களைச் சேர்த்ததன் மூலம் இந்த அமைப்பு மேலும் விரிவடைந்தது.
இந்த அமைப்பின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து நடைபெறும் முதல் உச்சி மாநாடு இது ஆகும்.
தற்போது, 30க்கும் மேற்பட்ட நாடுகள் BRICS அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளன.