TNPSC Thervupettagam

16வது இந்தியா ஆசியான் உச்சி மாநாடு

November 6 , 2019 1753 days 697 0
  • தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்தப்பட்ட 16வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொண்டார்.
  • “இந்தியாவின் கிழக்கு நோக்கியக் கொள்கை மற்றும் அண்டை நாடுகள் முதலில்” ஆகிய கொள்கைகளுக்காக மியான்மரின் முக்கியத்துவத்தை இந்தியப் பிரதமர் எடுத்துரைத்தார்.
  • CLMV நாடுகளுக்கான (கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் வியட்நாம்) வணிக நிகழ்ச்சியை 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் யாங்கோனில் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவும் இந்தோனேசியாவும் தமது இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவை அனுசரித்தன.
  • இந்தியப் பிரதமர் பாங்காக்கில் நடைபெற்ற 'சவாஸ்தீ பிரதமர் மோடி' என்ற நிகழ்ச்சியில் இந்தியச் சமூகத்தினரிடையே உரையாற்றினார்.
  • தாய் மொழியில், ‘சவாஸ்தீ’ என்ற சொல்லானது வாழ்த்துகளுக்கும் விடை பெறுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்த உச்சிமாநாட்டைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடைபெற்ற மற்ற உச்சி மாநாடுகள் பின்வருமாறு:
    • 35வது ஆசியான் உச்சி மாநாடு,
    • 14வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும்
    • விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டமைப்பின் (RCEP - Regional Comprehensive Economic Partnership) 3வது கூட்டம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்