TNPSC Thervupettagam

16வது தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம்

June 23 , 2021 1310 days 593 0
  • 16வது தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டமானது கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
  • ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றி, சட்டமன்றக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • அவரது உரையில்,
    • அனைத்து மாவட்டங்களிலும் பணிக்குச் செல்லும் பெண்களுக்காக வேண்டி  தங்கும் விடுதிகள் உருவாக்கப்படும்.
    • மாநிலத்தின் அனைத்து மெட்ரோ நகரங்களுக்கு அருகிலும் நவீன வசதிகளுடன் கூடிய பொலிவுறு நகரங்கள் உருவாக்கப்படும்.
    • மீனவர்களின் நலனிற்காக ஒரு தேசிய ஆணையத்தினை அமைப்பதற்கு மத்திய அரசிற்கு வலியுறுத்தப்படும்.
    • மாநிலத்தில் வேளாண்மைக்காக என்று ஒரு தனி நிதிநிலை அறிக்கை அறிமுகப் படுத்தப்படும்.
    • நிலத்தடி நீர்ப் பயன்பாட்டினை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய சட்டம் ஒன்று அறிமுகப் படுத்தப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்