TNPSC Thervupettagam

16வது நிதி ஆணையத்தின் அலுவல் பூர்வ வருகை

November 22 , 2024 16 hrs 0 min 39 0
  • ஆணையத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16வது நிதி ஆணையக் குழு தமிழகத்திற்கு வருகை தந்தது.
  • அக்குழுவின் ஆலோசனைகளின் ஒரு பகுதியாக நெம்மேலி உப்புநீக்க ஆலையையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
  • அப்போது மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கினை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
  • மேலும் அது குறைக்கப்பட்ட நிதிப் பகிர்வு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் திட்டங்களால் பெருகி வரும் நிதிச் சுமைகள் பற்றிய சிக்கல்களையும் நன்கு குறிப்பிட்டுக் காட்டியது.
  • தமிழ்நாடு போன்ற வளர்ந்து வரும் மாநிலங்களை மிகவும் நன்கு ஆதரிக்கும் திருத்தப் பட்ட நிதிக் கட்டமைப்பின் அவசியத்தை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
  • கடந்த நான்கு ஆண்டுகளில், 15வது நிதிக் குழுவினால் வெகுவாக பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களுக்கான 41% வருவாய்ப் பகிர்விற்கும், 33.16% உண்மையான வருவாய்ப் பகிர்வுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறித்து அரசு கவலை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்