TNPSC Thervupettagam

16வது நிதி ஆணையம் மற்றும் தமிழ்நாடு

November 25 , 2024 2 days 104 0
  • அரவிந்த் பனகாரியா, தமிழ்நாடு மாநில அரசானது 16வது நிதி ஆணையத்திற்காக நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட, விரிவான மற்றும் ‘நிபுணத்துவம் கொண்ட’ விளக்க அறிக்கையினை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.
  • தமிழ்நாட்டின் விளக்க அறிக்கை ஆனது, உண்மையில் அதன் பங்கு ஏன் 50% ஆக இருக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் உள்ளார்ந்து ஆராயப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
  • கடலோர மாநிலங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் நம் மாநில அரசின் விளக்க அறிக்கையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
  • நிதி ஆணையமானது வருமான தொலைவு/இடைவெளி, பரப்பளவு மற்றும் காடு மற்றும் சூழலியல் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளைக் குறைத்து, மக்கள்தொகை செயல்திறனுக்கு ஏற்ப கொடுக்கப்படும் நிதியினை நன்கு அதிகரிக்க வேண்டும் என்று அரசு கூறியது.
  • 'வருமான இடைவெளி' கணக்கிடும் போது தனிநபர் வருமானத்தை அளவிடுவதற்கு – பெயரளவு வருமானத்தைக் கணக்கிடுவதற்கு பதிலாக வாங்கும் திறன் சமநிலையை (PPP) பயன்படுத்துதல் - வேறு முறையைக் கையாள்வது குறித்து பரிசீலிக்குமாறும் தமிழ்நாடு அரசு ஆணையத்திடம் கோரியுள்ளது.
  • வகுக்கக்கூடிய வரிகளின் தொகுப்பில் மாநிலங்களின் பங்கைக் கணக்கிட வருமான இடைவெளி பயன்படுத்தப்படுகிறது.
  • இது ஒரு மாநிலத்தின் வருமானத்திற்கும் அதிக வருமானம் கொண்ட மாநிலத்திற்கும் இடையே உள்ள இடைவெளி ஆகும்.
  • தமிழ்நாடு வருமான இடைவெளியை 45 சதவீதத்தில் இருந்து (15வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி) 35 சதவீதமாகக் குறைக்கக் கோரியது மற்றும் வாங்கும் சக்தியை ஈடு செய்த பிறகான கணக்கீட்டை மேற்கொள்ளுமாறு கோரியது.
  • இதன்படி, வருமான இடைவெளியானது PPP சக்திக்கு ஏற்ப சரி செய்யப்பட வேண்டும் மற்றும் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்தி மக்கள் தொகை பெறப்பட வேண்டும்.
  • மக்கள்தொகை செயல்திறன் சிறப்பு மதிப்பினை 15 சதவீதத்தில் இருந்து சுமார் 20 சதவீதமாக அதிகரிக்கவும், நகரமயமாக்கலின் பங்கிற்கு சுமார் 10 சதவீத மதிப்பினை வழங்கவும் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
  • மக்கள்தொகையைப் பொறுத்தவரை, 15வது நிதி ஆணையமானது, 15% மதிப்பினை வழங்கி, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களைப் பயன்படுத்தியது.
  • 15வது நிதி ஆணையம் ஆனது, மக்கள்தொகை செயல்திறன் மாறிலிக்கு 12.5% ​​சிறப்பு மதிப்பினைப் பரிந்துரைத்திருந்தது ஆனால் தமிழ்நாடு அரசு ஆனது இதனை 20% ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, வருமான இடைவெளிக்கு 35% மதிப்பு, மக்கள் தொகை மற்றும் மக்கள்தொகை செயல்திறன் ஆகியவற்றுக்கு தலா 20%, பொருளாதாரத்திற்கானப் பங்களிப்பிற்கு 15%, நகரமயமாக்கலுக்கு 10% என மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
  • தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு மாநிலத்தின் பங்களிப்பு சுமார் 15 சதவீத மதிப்பினைப் பெற வேண்டும்.
  • குஜராத் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் இதே போன்ற பரிந்துரைகளை வழங்கி உள்ளன.
  • உதாரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% தமிழ்நாடு கொண்டு இருந்தால், இந்த அளவுருக்களின் அடிப்படையில் மாநிலத்தின் பங்கு 8% ஆக இருக்கும்.
  • செங்குத்து அதிகாரப் பகிர்வை (மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே) 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தவும் தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
  • நிதி ஆணையங்கள் ஆனது தமிழ்நாடு மாநிலத்திற்கு உதவும் வகையில் இல்லை,  மேலும் 9வது நிதி ஆணையம் ஆனது மாநில அரசிற்கு அதிகப் பங்கைப் பரிந்துரைத்து இருந்தாலும், அதன் பங்கு குறைந்து கொண்டே வருகிறது.
  • ஒன்பதாம் நிதி ஆணையத்தின் சுமார் 7.93% என்ற பரிந்துரையிலிருந்து 15வது நிதி ஆணையத்தின் 4.07% பரிந்துரை வரையில், தமிழ்நாடு மாநிலத்திற்கான அதிகாரப் பகிர்வின் பங்கு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
  • 15வது நிதி ஆணையமானது பேரிடர் நிவாரணக் குறியீட்டைப் பயன்படுத்தி, பேரிடர் நிவாரண மானியங்களை பகுதியளவில் பகிர்ந்தளித்தது, ஆனால் தமிழக அரசு அதில் சில ஒதுக்கீடுகளைக் கொண்டிருந்தது.
  • மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வில் குறைவு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்களில் மாநிலங்களின் பங்கு அதிகரிப்பு ஆகிய இரண்டும் மாநில அரசுகளின் சுமையை அதிகப்படுத்தும் இரண்டு முக்கியக் காரணிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்