TNPSC Thervupettagam

17வது ஜி20 உச்சி மாநாடு

November 19 , 2022 611 days 285 0
  • இது இந்தோனேசியாவின் பாலி நகரில் நடத்தப்பட்டது.
  • இந்த இரண்டு நாள் மாநாடு “ஒன்றாக மீட்கப் படுவோம், நன்றாக வலுப்பெறுவோம்” என்ற கருத்துருவில் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த ஜி20 உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக மூன்று பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.
  • அவை உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் எண்ணியல் உருமாற்றம் ஆகியனவாகும்.
  • இந்தோனேசியாவால் தலைமை தாங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
  • உணவு மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பிலான ஜி20 பயிற்சிப் பட்டறையில் உரையாற்றும் சமயத்தில், பிரதமர் மோடி உக்ரைனில் இந்தியாவின் நீண்டகால நிலையான பேச்சுவார்த்தை மற்றும் சாதுரியத்தை (Diplomacy) வலியுறுத்தினார்.
  • இந்த நிகழ்வில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரேசில் மற்றும் மெக்சிகோ நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.
  • இந்த நிகழ்வில் இணையதள வாயிலில் உரையாற்றிட உக்ரேனிய அதிபர் விளோடிமிர் ஜெலன்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
  • ஜி20 முக்கூட்டு என்பது ஜி20 அமைப்பிற்குள்ளாக, தற்போதைய, முந்தைய மற்றும் அடுத்து வரப்போகும் தலைமை உறுப்பினர்களை அதாவது இந்தோனேசியா, இத்தாலி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைக் குறிப்பிடுகிறது.
  • இந்தியாவானது இந்தோனோசியாவிடமிருந்து 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 முதல் ஜி20 தலைமைப் பெறுப்பை ஏற்றுக் கொண்டு 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் முறையாக ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டினை நடத்த உள்ளது.
  • 2023ம் ஆண்டில் 18வது ஜி20 உச்சி மாநாடு புதுதில்லியில் நடத்தப்படும்.
  • ஜி20 தலைமைப் பொறுப்பைப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஒப்படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்