175 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம்
September 21 , 2024 63 days 116 0
கடந்த 175 ஆண்டுகளில் இல்லாத அளவில், 2024 ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதமானது அதிவெப்பமான ஆகஸ்ட் மாதமாக பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் பதிவான சராசரி உலகளாவிய நிலப்பரப்பு மற்றும் கடல் மேற் பரப்பு வெப்பநிலையானது 20 ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையான 60.1 டிகிரி பாரன்ஹீட் (15.6 டிகிரி C) என்ற அளவை விட சுமார் 2.29 டிகிரி பாரன்ஹீட் (1.27 டிகிரி C) அதிகமாக இருந்தது.
தென் அரைக்கோளமானது சராசரியை விட சுமார் 0.96 டிகிரி சென்டிகிரேட் என்ற மிக அதிக வெப்ப நிலையில் பதிவான ஒரு வெப்பமான குளிர்காலமாகும்.
2024 ஆம் ஆண்டு கோடைக்காலம் ஆனது வட அரைக்கோளத்தில் பதிவான மிகவும் வெப்பமான ஒரு பருவமாகும்.
தற்போது, 46 ஆண்டு காலத்தியப் பதிவில் உலகளாவிய கடல் பனி பரவல் ஆனது 8.32 மில்லியன் சதுர மைல்கள் என்ற அளவில் இரண்டாவது குறைவான அளவாக பதிவாகி உள்ளது.
இது 1991-2020 ஆம் ஆண்டு சராசரியை விட 1.05 மில்லியன் சதுர மைல்கள் குறைவாக இருந்தது.