TNPSC Thervupettagam

1798 ஆம் ஆண்டு சட்ட விரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர் சட்டம் – அமெரிக்கா

March 23 , 2025 8 days 49 0
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மில்லியன் கணக்கான மக்களை நாடு கடத்தச் செய்வதற்கான அறிவிப்பில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டவர் சட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்.
  • ட்ரென் டி அரகுவா என்று பெயரிடப்பட்ட ஒரு வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்போடு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான வெனிசுலா குடிமக்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றவும் அவர் உத்தரவிட்டார்.
  • பிரான்சு நாட்டுடனான பிரச்சினைகளின் போது உளவுப் பணிகள் மற்றும் மிக அழிவு கரமான நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்காகச் சட்டம் 1798 ஆம் ஆண்டில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டவர் சட்டம் இயற்றப்பட்டது.
  • இந்தச் சட்டம் ஆனது, இந்தச் செயலைச் செயல்படுத்தத் தூண்டிய நிகழ்வை அதிபர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
  • அதிபர் அதை முடிவுக்குக் கொண்டு வரும் வரை இந்தச் சட்டம் அமலில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்