தரவுகளில் முறைகேடுகள் ஏற்பட்டதால், 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், உலக வங்கி இந்த அறிக்கையை வெளியிடுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்திருந்தது.
சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அஜர்பைஜான் ஆகிய 4 நாடுகள் முறைகேடான தரவுகளைச் சமர்ப்பித்திருந்தன.
புதிய அறிக்கையின்படி, சீனா 78வது இடத்திலிருந்து 85வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அஜர்பைஜான் ஆகிய மூன்று நாடுகளின் தரவரிசைகளும் மாறியுள்ளன.
2020 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 190 நாடுகளில் இந்தியா 63வது இடத்தில் உள்ளது.
முந்தைய ஆண்டை விட இந்தியா 14 இடங்கள் முன்னேறியுள்ளது.