17வது மக்களவையானது 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அதன் அமர்வுகளை நடத்தியது.
இந்த ஐந்து ஆண்டுகளில், மக்களவையானது அதன் திட்டமிடப்பட்ட நேர காலத்தில் 88% வரை செயல்பட்டுள்ள அதே சமயம் மாநிலங்களவையானது 73% வரை செயல் பட்டுள்ளது.
17வது மக்களவையானது 274 அமர்வுகளை நடத்தியது.
முந்தைய நான்கு மக்களவைகள் மட்டுமே குறைவான அமர்வுகளை மேற்கொண்டன.
அவை அனைத்தும் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே கலைக்கப் பட்டு விட்டன.
இந்த மக்களவையில் மிகக் குறைவான அமர்வுகள் ஆனது 2020 ஆம் ஆண்டில் (33 நாட்கள்) கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நடைபெற்றன.
இந்த மக்களவையின் போது நடைபெற்ற 15 அமர்வுகளில் 11 அமர்வுகள் முன்கூட்டியே ஒத்தி வைக்கப்பட்டன.
இதன் விளைவாக, 40 திட்டமிடப்பட்ட அமர்வுகள் நடத்தப்படவில்லை (13% திட்டமிடப் பட்ட அமர்வுகள்).
17வது மக்களவையின் போது, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், 206 வழக்குகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
2023 ஆம் ஆண்டு குளிர்கால அமர்வில், 146 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தவறான நடத்தை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
179 மசோதாக்கள் (நிதி மற்றும் நிதிப்பகிர்வு மசோதாக்கள் தவிர்த்து) நிறைவேற்றப் பட்டன.
நிதி மற்றும் உள்துறை அமைச்சகங்கள் அதிக எண்ணிக்கையிலான மசோதாக்களை முன்வைத்தன (ஒவ்வொன்றும் 15%). அதைத் தொடர்ந்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் (9%), மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (9%) ஆகியவை உள்ளன.
16% மசோதாக்கள் விரிவான மதிப்பாய்விற்காக குழுக்களுக்கு அனுப்பப்பட்டன.
இது முந்தைய மூன்று மக்களவைகளின் புள்ளிவிவரங்களைக் காட்டிலும் குறைவு ஆகும்.
இந்த மக்களவை கலைக்கப்படுவதன் மூலம் நான்கு மசோதாக்கள் காலாவதியாகும்.
இதுவரையில் இருந்த அனைத்து மக்களவைகளிலும் இதுவே குறைந்த எண்ணிக்கை ஆகும்.
729 தனிநபர் உறுப்பினர் மசோதாக்கள் (PMBs) 17வது மக்களவையில் அறிமுகப் படுத்தப் பட்ட நிலையில் இது 16வது மக்களவையைத் தவிர, முந்தைய அனைத்து மக்களவைகளிலும் அறிமுகப் படுத்தப்பட்டதை விட அதிகமாகும்.
இருப்பினும், இரண்டு PMB மசோதாக்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டன.
அதே காலகட்டத்தில், மாநிலங்களவையில் 705 PMB மசோதாக்கள் அறிமுகப்படுத்தப் பட்டு அதில் 14 மசோதாக்கள் விவாதிக்கப்பட்டன.
இன்றுவரை, 14 PMB மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ளன.
1970 ஆம் ஆண்டு முதல் எந்தவொரு மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேற்றப் படவில்லை.
16வது மக்களவை அல்லது 17வது மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.
ஆனால் 15வது மக்களவையில் இது போன்ற இரண்டு தீர்மானங்களும் மற்றும் 14வது மக்களவையில் இது போன்ற 7 தீர்மானங்களும் விவாதிக்கப்பட்டன.