17வது மக்களவையில் தனிநபர் உறுப்பினர்களின் மசோதாக்கள்
January 1 , 2025
58 days
167
- 2024 ஆம் ஆண்டு முடிவடைந்த 17வது மக்களவையின் ஐந்தாண்டு காலத்தில், தனிநபர் உறுப்பினர்களின் மசோதாக்களுக்காக 9.08 மணிநேரம் மட்டுமே செலவிடப்பட்டது.
- மாநிலங்களவையானது அதன் செயல்பாட்டுக் காலத்தில் 27.01 மணி நேரம் மட்டுமே அதற்காக செலவிட்டது.
- கீழவை ஆனது சுமார் 16.43 மணிநேரமும், மேலவையானது 20.78 மணிநேரமும் தனி நபர் உறுப்பினர்களின் தீர்மானத்திற்காக செலவிட்டன.
- 18வது மக்களவையின் இரண்டு அமர்வுகளில், 0.15 மணி நேரமும், மாநிலங்கள் அவையின் 0.62 மணிநேரமும், அத்தகைய மசோதாக்களுக்காக செலவிடப்பட்டது.
- கீழவையானது 1.98 மணி நேரமும், மேலவை 2.09 மணி நேரமும் தீர்மானங்களுக்காக செலவிட்டன.
- இது வரை மொத்தம் 14 தனி நபர் மசோதாக்கள் இரண்டு சபைகளிலும் நிறைவேற்றப் பட்டு, ஒப்புதல் வாங்கப் பட்டுள்ளன.
- 1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு இது வரையில் ஒன்று கூட இரண்டு சபைகளிலும் சேர்த்து நிறைவேற்றப் படவில்லை.

Post Views:
167