காவிரி தெற்கு வனவிலங்குச் சரணாலயத்தை மாநிலத்தின் 17வது வனவிலங்கு சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சரணாலயம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதுகாக்கப் பட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கியது.
இது 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள் மற்றும் சிவப்பு நிறப் பட்டியலில் இடம் பெற்ற பிற இனங்கள் உள்ளன.
மலை மகாதேஷ்வரா வனவிலங்கு சரணாலயம், கர்நாடகாவில் உள்ள பில்லிகிரி ரங்க சுவாமி கோயில் புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு மாவட்டம் ஆகியவற்றுடன் இந்த நிலப்பரப்பு நீலகிரி உயிர்க் கோளத்துடனான இணைப்பினைக் கொண்டுள்ளது.
நந்திமங்கலம்-உலிபண்டா வழித்தடம் மற்றும் கோவைப் பள்ளம்-அனேபித்தஹல்லா ஆகிய இரண்டு முக்கியமான மற்றும் பெரிய யானை வழித்தடங்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.