TNPSC Thervupettagam

18வது உலகப் பாதுகாப்பு மாநாடு

February 25 , 2023 641 days 292 0
  • 18வது உலகப் பாதுகாப்பு மாநாடானது (2023) ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது.
  • சர்வதேச இரயில்வே ஒன்றியம் மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து இந்த மூன்று நாட்கள் மாநாட்டினை நடத்துகின்றன.
  • இந்த நிகழ்விற்கான கருத்துரு, "இரயில்வே பாதுகாப்பு சார்ந்த உத்திகள்: எதிர் காலத்திற்கான நடவடிக்கைகள் மற்றும் குறிக்கோள்" என்பதாகும்.
  • முன்னதாக, 2006 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், இந்திய அரசானது சர்வதேச UIC உலகப் பாதுகாப்பு  மாநாட்டினைப் புது டெல்லியில் நடத்தியது.
  • சர்வதேச இரயில்வே ஒன்றியத்தின் தலைமையகம் ஆனது பிரான்சின் பாரீஸ் நகரில் அமைந்துள்ளது.
  • இது 1922 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிற ஒரு தொழில்முறைச் சங்கமாகும்.
  • இரயில்வே துறையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இது உலகம் முழுவதும் உள்ள ரயில் போக்குவரத்தினை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்