TNPSC Thervupettagam

18வது மக்களவையின் முதல் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர்

April 8 , 2025 12 days 68 0
  • 18வது மக்களவையின் முதல் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரானது, அதிக செயல் பாட்டுத் திறன் கொண்டதாக பதிவாகியுள்ளது.
  • இது அதன் கடைசி நாளில் சில இடையூறுகளைக் கண்டதுடன் இரு அவைகளிலும் ஒத்தி வைப்புகள் ஏற்பட்ட.
  • மாநிலங்களவையானது, வக்ஃப் மசோதாவை நிறைவேற்ற வேண்டி, 17.02 மணி நேரம் இடைவேளை இல்லாமல் செயலாற்றி முந்தையச் சாதனைகளை முறியடித்துள்ளது.
  • குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றியுரைப்பு தீர்மானம் ஆனது, மக்களவையில் அதற்கென ஒதுக்கப்பட்ட 12 மணி நேரத்தை விட மிக அதிகமாக 17 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை விவாதிக்கப்பட்டது.
  • மாநிலங்களவையில், இந்த விவாதம் ஆனது 21 மணி நேரம் 46 நிமிடங்கள் வரையில் நடைபெற்றது.
  • மத்திய நிதிநிலை அறிக்கையானது, மக்களவையில் 16 மணி நேரம் 13 நிமிடங்களும், மாநிலங்களவையில் 17 மணி நேரம் 56 நிமிடங்களும் விவாதிக்கப்பட்டது.
  • பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன.
  • மக்களவையானது சுமார் 118% செயல்பாட்டுத் திறனையும், மாநிலங்களவை 119% செயல்பாட்டு திறனையும் பதிவு செய்துள்ளது.
  • உடுகுறியிட்ட கேள்விகளில் சுமார் 28% கேள்விகளுக்கு மட்டுமே வாய்மொழியாக பதிலளிக்கப் பட்டது.
  • 18வது மக்களவையின் முதல் ஆண்டில் பதினொரு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன என்பதோடு இது 1999 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்றப்பட்டதை விட மிகக் குறைவாகும்.
  • மக்களவையானது மூன்று அமைச்சகங்களின் செலவினங்களை மட்டும் விவாதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்