18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு (EAS) ஆனது இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது.
இதற்கு இந்தோனேசிய அதிபர் H.E. ஜோகோ விடோடோ தலைமை தாங்கினார்.
கிழக்கு ஆசிய உச்சி மாநாடு (EAS) ஆனது அதன் உறுப்பினர் நாடுகளுக்கிடையே அரச முறை ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு தளமாகச் செயல்படுகிறது.
இது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) 10 உறுப்பு நாடுகளோடு, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய எட்டு முக்கியப் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய 18 உறுப்பினர்களை கொண்டது.