18 ஆளுங்கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்
September 19 , 2017 2624 days 910 0
தமிழ்நாடு சட்டசபை பேரவைத் தலைவர்/சபாநாயகர் 18 ஆளுங்கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள 1986 ஆம் ஆண்டின் ‘தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதியின்’ கீழ் 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் விதி 191(2)ன் படி இந்த எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விதி 191(2)
ஒருவர் பத்தாவது அட்டவணையின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவர் மாநில சட்ட மன்றம் அல்லது மாநில சட்டமேலவையின் உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என விதி 191(2) மொழிகிறது.