TNPSC Thervupettagam

18 புதிய தூதரகங்கள் – ஆப்பிரிக்கா – 2021

April 5 , 2018 2425 days 768 0
  • 2018 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த நான்கு ஆண்டு காலங்களில் ஆப்பிரிக்காவில் 18 புதிய இந்தியத் தூதரகங்களை தொடங்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
  • டோகோ, சுவாஸிலாந்து, சியேர லியோன் (Sierra Leone), சோமாலியா, சவோ டோம் & பிரின்சிபி (Sao Tome & Principe),   ருவாண்டா, மௌரிடானியா (Mauritania),  லைபீரியா, கினியா, கினியா பசவ், எரித்திரியா, நிலநடுக்கோட்டில் அமைந்துள்ள கினியா (Equatorial Guinea),  டிஜிபோட்டி, காங்கோ குடியரசு, கேமரூன், பர்கின பசோ, சாட், கேப் வெர்டி (Cape Verde)  ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் 18 புதிய இந்தியத்  தூதரகங்கள் துவங்கப்பட உள்ளன.
  • இவை வளங்கள் செறிந்த ஆப்பிரிக்க கண்டத்தில் இந்தியாவினுடைய நிலை ஊன்றலை (Footprint) அதிகரிக்கும். மேலும் இந்தியாவினுடைய இராஜ்ஜிய அடைவை (Diplomatic Outreach) இவை மேம்படுத்தும்.
  • மேலும் இது இந்திய-ஆப்பிரிக்க மன்ற மாநாட்டின் (India-Africa Forum Summit) ஒப்புக்கொண்ட பணிகளை அமல்படுத்துவதில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்