TNPSC Thervupettagam

18 புதிய புவியியல் பூங்காக்கள் வலையமைப்பு

April 5 , 2024 105 days 206 0
  • யுனெஸ்கோ அமைப்பின் நிர்வாகக் குழுவானது, யுனெஸ்கோ அமைப்பின் உலகளாவிய புவியியல் பூங்காக்கள் வலையமைப்பில் 18 தளங்களைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது 48 நாடுகளில் உள்ள மொத்த புவியியல் பூங்காக்களின் எண்ணிக்கையை 195 ஆக உயர்த்துகிறது.
  • யுனெஸ்கோ அமைப்பின் இரண்டு உறுப்பினர் நாடுகளான நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை இந்த வலையமைப்பில் இணைகின்றன.
  • யுனெஸ்கோ அமைப்பின் புவியியல் பூங்காக்கள் அந்தஸ்து ஆனது 2015 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என்பதோடு இது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் பாரம்பரியம வாய்ந்த பகுதிகளை அங்கீகரிக்கிறது.
  • புவியியல் பூங்காக்கள் ஆனது பொது விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டிற்கான நிலையான அணுகுமுறை ஆகியவற்றுடன் சேர்த்து அவர்களின் குறிப்பிடத்தக்கப் புவியியல் பாரம்பரியத்தின் வளங்காப்பினையும் மேற்கொள்வதன் மூலம் உள்ளூர்ச் சமூகங்களுக்கான சேவைகளையும் வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்