18 வயதுக்கும் குறைவான வயதுடைய மனைவியுடன் தாம்பத்ய உறவு குற்றம் என்று அறிவிப்பு
October 12 , 2017 2601 days 878 0
வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International food policy Research Institute – IFPRI) ஆண்டுதோறும் உலக பட்டினி குறியீட்டை வெளியிடுகிறது.
2017 ஆம் ஆண்டிற்கான இந்த குறியீட்டில் இந்தியா 119 நாடுகளில் 100 ஆது இடத்தை பிடித்துள்ளது.
2016 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 97வது இடத்திலிருந்து 3 இடங்கள் பின்தங்கி 100 வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலக பட்டினி குறியீடு (GHI-Global Hunger Index)
GHI -உலக நாடுகளில் நிலவும் பட்டினி நிலைகளை விளக்கப் பயன்படுத்தப்படும் ஓர் பல்பரிமாண புள்ளியியல் முறை ஆகும்.
உலக நாடுகளின் பட்டினியை அழிக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் தோல்வியை 4 அளவுருக்களின் அடிப்படையில் 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான மொத்த மதிப்பெண் அளவீட்டில் இந்தக் குறியீடு கணக்கிடப்படுகின்றது.
நான்கு அளவுருக்கள் வருமாறு.
ஊட்டச்சத்து குறைபாடு (Undernourishment)
உயரத்திற்குத் தகுந்த எடை இல்லாமை (Child Wasting)
குழந்தைகள் வளர்ச்சியின்மை (Child stunting )
குழந்தைகள் இறப்பு (Child mortality)
இந்த மதிப்பெண் பட்டியலில்,
பூஜ்ஜியம் என்றால் சிறந்த நிலையினையும்
நூறு என்றால் மோசமான நிலையினையும் குறிக்கும்.
இந்த வழிமுறையிலான கணக்கீட்டின்படி இந்தியா 4 மதிப்பெண்கள் பெற்று பட்டினி நிலைகளில் “தீவிரமான” (Serious) வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவை விட பின்தங்கிய இடங்களில் உள்ளன.
கடைசி மூன்று ஆண்டுகளில் அதாவது 2014ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்தியா 55வது இடத்திலிருந்து 45 இடங்கள் சரிந்து தற்போது 100வது இடத்தை அடைந்துள்ளது.