TNPSC Thervupettagam

18வது மக்களவையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்

June 9 , 2024 171 days 434 0
  • திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது, வெற்றி பெற்ற வேட்பாளர்களில் அதிக சதவீதத்திலான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டு திரிணாமுல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மொத்தம் 38% பேர் பெண்கள் ஆவர் என்ற நிலையில் இது நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியிலும் பதிவாகாத எண்ணிக்கையாகும்.
  • 18வது மக்களவையில் மொத்தம் 74 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற நிலையில் இது கடந்த பதவிக் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 பாராளுமன்ற உறுப்பினர்களை விட குறைவாகும்.
  • 18வது மக்களவையில் 13.44% பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்ற நிலையில் இது 1952 ஆம் ஆண்டு முதல் பதிவான அதிக விகிதங்களில் ஒன்றாகும்.
  • 17வது மக்களவையில் 78 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் என்ற நிலையில் இதன் பங்கு மொத்த எண்ணிக்கையில் 14% அதிகமாக இருந்தது.
  • 16வது மக்களவையில் 64 பெண் உறுப்பினர்களும், 15வது மக்களவையில் 52 பெண் உறுப்பினர்களும் இருந்தனர்.
  • பல அறிக்கைகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 48.41% பெண்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்