தமிழக அரசானது, ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மலையில் உள்ள 80,114.80 ஹெக்டேர் பரப்பிலான காப்புக் காடுகளை தந்தை பெரியார் வனவிலங்குச் சரணாலயமாக அறிவித்துள்ளது.
இந்தக் காப்புக் காடுகள் ஆனது, நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தினைக் காவேரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கிறது.
இது மாநிலத்தின் 18வது வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தேசிய புலிகள் வளங்காப்பு ஆணையத்தினால் அடையாளம் காணப்பட்ட புலிகள் வழித் தடங்களில் ஒன்றாகும் என்பதோடு மேலும் இது அதிக எண்ணிக்கையில் புலிகள் காணப்படும் பகுதியும் ஆகும்.