19ஆவது விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தக் கூட்டம்
August 1 , 2017 2671 days 993 0
இக்கூட்டம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஜூலை 17 முதல் 28 வரை நடைபெற்றது. இந்த சந்திப்பில் இவ்வமைப்பின் வர்த்தகப் பேச்சுவார்த்தைக் குழு (Trade Negotiating Committee - TNC) மற்றும் பிற குழுக்கள் கலந்துக்கொண்டன.
விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டமைப்பு என்பது பதினாறு நாடுகளினை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் ஆகும். இதில் பங்கு வகிக்கும் நாடுகள்
ஆசியான் கூட்டமைப்பின் பத்து நாடுகள் - புரூணை டருசலம், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (Free Trade Agreements - FTAs) பங்குதாரர்களான - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா, கொரியா மற்றும் இந்தியா.
இந்த 19ஆவது சந்திப்பின் பொழுது ; பொருட்கள் வர்த்தகம் செயற்குழு , சேவைகள் வர்த்தகம் செயற்குழு, முதலீடுகள் வர்த்தகம் செயற்குழு ஆகியவற்றின் இணைக் கூட்டங்கள் நடைபெற்றது. அறிவு சார்ந்த சொத்துகள், மின்னணு வர்த்தகம், சட்டம் மற்றும் நிறுவன நெருக்கடி குறித்த செயற்குழுக்களும் இக்கூட்டத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தின.