TNPSC Thervupettagam

19வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு

November 19 , 2022 611 days 256 0
  • கம்போடியாவின் பேணாம் பென் நகரில் நடைபெற்ற 19வது ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
  • அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமூகக் கலாச்சார உறவுகளை தரம் உயர்த்திட வேண்டி 2002 ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் ஆசியானும் வருடாந்திர அளவில் உச்சி மாநாடுகளை நடத்தி வருகின்றன.
  • துணைக் குடியரசுத் தலைவர் கம்போடியாவின் பேணாம் பென் நகரில் நடைபெற்ற 17வது கிழக்காசிய உச்சி மாநாட்டிலும் உரையாற்றினார்.
  • பேணாம் பென்னில் நடைபெற்ற 40வது மற்றும் 41வது ஆசியான் உச்சி மாநாடுகளின் ஒரு பகுதியாக கிழக்காசிய உச்சி மாநாடு நடத்தப்பட்டது.
  • ஆசியான் குழுமத்தின் 11வது உறுப்பினராக கிழக்கு டிமோர் என்ற நாட்டினை அனுமதித்திட ஆசியான் அமைப்பு கொள்கையளவில் நட்புக் கொண்டிருக்கிறது.
  • 1999 ஆம் ஆண்டில் இதில் கம்போடியா அனுமதிக்கப்பட்ட பிறகு, இந்தப் பிராந்திய மன்றத்தில் ஏறத்தாழ இரு தசாப்தங்களுக்குப் பிறகு முதலாவது புதிய ஒரு உறுப்பினர் அனுமதிக்கப்பட உள்ளது.
  • கிழக்கு டிமோர் என்பது முன்னதாக இந்தோனேசியப் பிராந்தியத்தின் ஒரு பகுதி ஆகும்.
  • இது 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
  • இது ஆசியாவில் மிகுந்த இளைய ஜனநாயக நாடாக அதனை மாற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்