TNPSC Thervupettagam

19வது உலகின் 500 முன்னணி நிறுவனங்கள் அறிக்கை 2025

February 20 , 2025 3 days 49 0
  • ஆப்பிள் நிறுவனம் ஆனது, 574.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் மீண்டும் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக இடம் பெற்றுள்ளது.
  • இதில் மைக்ரோசாப்ட் நிறுவனமானது, சுமார் 461 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில் கூகிள் நிறுவனமானது 413.0 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற இதர நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
  • டிக் டாக் / டூயின் மற்றும் முகநூல் ஆகிய இரண்டும் 2024 ஆம் ஆண்டில் பெற்ற 7 மற்றும் 8 வது இடத்தை மீண்டும் பிடித்துள்ளன.
  • 2014 ஆம் ஆண்டில் இந்தப் பட்டயலில் முதன்முதலில் மதிப்பிடப்பட்ட போது முன்னணி 500 நிறுவனங்களில் 424வது இடத்தைப் பிடித்த, NVIDIA நிறுவனம் ஆனது தற்போது முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.
  • இன்ஃபோசிஸ் நிறுவனம் 132வது இடத்திலும், HDFC வங்கி 164 வது இடத்திலும் உள்ளன.
  • இதில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, WeChat நிறுவனம் ஆனது நிறுவன மதிப்பு வலிமைக் குறியீட்டுடன் உலகின் வலிமையான நிறுவனமாக உள்ளது.
  • நைக் உலகின் இரண்டாவது வலுவான நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்