பழனியில் கிடைத்த இந்த முத்திரைத்தாள் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இது பழனி - பாலசமுத்திரத்தின் கடைசி ஜமீன்தார் வேலாயுதம் சின்ன நாயக்கனின் மனைவி சின்னோப்பாலம்மாவால் எழுதப்பட்டது.
அந்த ஜமீன்தார் சென்னையில் உள்ள சிறைச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
அந்த ஜமீன்தாரின் பெரிய விவசாய நிலங்களைப் பராமரிக்க, அவரின் மனைவி 23 மேலாளர்களை நியமித்துள்ளார்.
அதில் கிழக்கிந்திய நிறுவனத்தின் இரண்டு முத்திரைகள் உள்ளன என்ற நிலையில் அதில் ஒரு முத்திரையில் இரண்டு அணாக்கள் என முத்திரைத் தாளின் விலை உள்ளது (இரண்டு அணா' என்ற வார்த்தை தமிழ், ஆங்கிலம், உருது மற்றும் தெலுங்கு என நான்கு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது).
இன்னொரு முத்திரையில் காகிதத்தை விற்ற கருவூலத்தின் முத்திரை உள்ளது.
இந்த அனைத்துப் பரிவர்த்தனைகளும் கிழக்கிந்திய நிறுவனத்தின் கருவூலத்தால் மட்டுமே மேற்கொள்ளப் பட்டன.
கடிதம் முழுவதும் தமிழில் எழுதப்பட்டு, முத்திரைத் தாளின் தேதி பிப்ரவரி 21, 1818 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.