TNPSC Thervupettagam

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி

November 8 , 2024 14 days 76 0
  • அமெரிக்காவின் கொலராடோவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 17 பதக்கங்களை வென்றுள்ளது.
  • இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் வென்ற நான்கு தங்கப் பதக்கங்களும் அடங்கும்.
  • 9 ஆடவர் மற்றும் 10 மகளிர் அடங்கிய 19 குத்துச்சண்டை வீரர்கள் கொண்ட இந்திய அணியில், 12 தடகள வீரர்கள் இறுதிப் போட்டியை அடைந்தனர் என்பதோடு இதில் ஒவ்வொரு மகளிர் குத்துச்சண்டை வீராங்கனையும் பதக்கம் வென்றனர்.
  • நான்கு தங்கப் பதக்கம் வென்றவர்களில் பட்டியலில் உள்ள ஒரே ஆண் சாம்பியன் ஹேமந்த் சங்வான் ஆவார் என்ற நிலையில் இதில் மற்ற பெண் சாம்பியன்கள் கிரிஷா வர்மா, பார்த்தவி கிரேவால் மற்றும் வன்ஷிகா கோஸ்வாமி ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்