TNPSC Thervupettagam

19 விண்மீனிடை சிறுகோள்கள்

May 1 , 2020 1672 days 677 0
  • ஒரு நிரந்தர சிறுகோள்கள் கூட்டமானது முதல் முறையாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • ராயல் வானியல் சங்கத்தின் மாதாந்திர அறிவிப்புகள் இதழில் இந்த ஆய்வு வெளியிடப் பட்டுள்ளது.
  • இது பிரேசிலைச் சேர்ந்த வானியலாளர்களால் வியாழன் மற்றும் நெப்டியூன் கோள்களுக்கு இடையே  கண்டுபிடிக்கப் பட்டது.
  • இது சூரிய மண்டலத்தின் மாபெரும் கிரகங்களுக்கு இடையில் சுற்றித் திரிகிறது.
  • 'ஓமுவாமுவா' என்று அழைக்கப்படும் முதல் விண்மீனிடை சிறுகோளானது 2017 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • லைரா எனும் விண்மீன் கூட்டத்தில் உள்ள வேகா என்ற நட்சத்திரத்திலிருந்து இந்த சிறுகோள் வெளி வந்துள்ளது.
  • சிறுகோள்கள் சென்டார்ஸ் எனப்படும் குழுவைச் சேர்ந்தவையாகும்.
  • நமது சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருந்து இந்தச் சிறுகோள்கள் உருவாகின்றன.
  • பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மற்ற நட்சத்திரங்களிலிருந்து சிறுகோள்கள் கவர்ந்து இழுக்கப் பட்டதாக நம்பப் படுகிறது.
  • பேரண்டம் விரிவடையத் தொடங்கியதும், சூரியன் பிறந்தது. அதன் பின்னர் அதிகரித்து வரும் சூரியனின் ஈர்ப்பு விசை இந்த சிறுகோள்களை சூரிய மண்டலத்திற்குள் உள் இழுத்தது.
  • ஒரு காலத்தில் மற்றொரு நட்சத்திரத்தைச் சேர்ந்த இந்தச் சிறுகோள்கள் தற்போது வியாழனுக்கும் நெப்டியூனுக்கும் இடையில் சுற்றி வருகின்றன.
  • அவை நம் சூரியனைச் சுற்றிக் கொண்டு வெற்றுப் பாதையில் ஒளிந்து கொண்டு இருக்கின்றன.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள்கள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் பிறந்ததிலிருந்து இருப்பதாக நம்பப் படுகிறது.
  • நட்சத்திரங்களிடையேயான மிக அதிக நெருக்கமானது இன்றையக் காலத்தை விட ஆரம்ப நாட்களில் நட்சத்திரங்களுக்கிடையே ஈர்ப்பு விசை மிகவும் வலுவாக இருந்தமையை அவை கொண்டிருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றது.
  • இது சிறுகோள்களை ஒரு நட்சத்திர அமைப்பிலிருந்து இன்னொரு நட்சத்திர அமைப்பிற்கு இழுக்க உதவியது.
  • பேரண்டம் விரிவடைந்து சூரியன் வேகமாக வளர்ந்து, அதன் சொந்த ஈர்ப்பு விசையை அதே உருவாக்கியதன் மூலம் விண்வெளிப் பாறைகள் அது இருந்த இடத்திலிருந்து அகற்றப் பட்டதாக வானியலாளர்கள் நம்புகின்றனர்.
  • வளர்ந்து வரும் நட்சத்திரத்தின் மகத்தானச் சக்தியானது பாறைகளை சூரிய மண்டலத்திற்குள் உள்ளே வரும்படி உறிஞ்சியது. அன்றிலிருந்து அவை இங்கேயே இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்