1923 ஆம் ஆண்டு மழைப் பொழிவு
December 25 , 2023
336 days
245
- 1923 ஆம் ஆண்டு தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு திருநெல்வேலியில் இரண்டு நாட்களில் 42.3 சென்டி மீட்டருக்கு மேல் பெய்த மழையால் ஏற்பட்டதாகும்.
- இந்த மழைப்பொழிவு தற்போது தென் தமிழகம் எதிர்கொண்டதைப் போன்ற அதே சேதத்தை திருநெல்வேலிக்கும் ஏற்படுத்தியுள்ளது.
- ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில், ஒரு நூற்றாண்டுக்கு முன், ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையம் மற்றும் இதர நிலையங்கள் நான்கு நாட்கள் வெள்ளத்தில் மூழ்கின.
- 1923 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மற்றும் கடையம் ஆகிய பகுதிகளில் ஒரு வாரத்தில் முறையே 44.2 செ.மீ மற்றும் 43.4 செ.மீ மழை பெய்துள்ளது.
- இதேபோல், பாளையங்கோட்டை (37.8 செ.மீ.), தென்காசி (37.2 செ.மீ.) ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது.
- இந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் டிசம்பர் 18 ஆகிய தேதிகளில் காயல்பட்டினத்தில் சுமார் 118 செ.மீ மழை பெய்துள்ளது.
- குலசேகரப்பட்டினத்தில் 1901 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 44 முறை 10 செ.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான மழை பதிவாகியுள்ளது.
- இதேபோல், திருச்செந்தூரில் 1914 முதல் 1970 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் 47 முறை 10 செ.மீ. அளவிலான மழை பதிவாகியுள்ளது.
Post Views:
245