TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 27 , 2018 2184 days 674 0
  • புது தில்லியில் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்களுக்கான தேசிய ஆணையத்தின் 2வது சந்திப்பு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • இக்கூட்டம் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜுவ் குமார் தலைமையில் நடைபெற்றது.
  • ஏற்கெனவே மேன்புக்கர் பரிசு வென்ற இலங்கையில் பிறந்த கனடா நாட்டு எழுத்தாளரான மைக்கேல் ஒன்டாட்ஜி ‘வார்லைட்’ (War light) என்ற அவரது சமீபத்திய நாவலுக்காக மேன் புக்கர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்நாவல் இரண்டாம் உலகப் போருக்குப்பின் இலண்டனில் இருந்த இரண்டு ஆதரவற்றவர்களைப் பற்றிய கதை ஆகும்.
    • 1992-ல் மேன்புக்கர் பரிசு பெற்ற ஒன்டாட்ஜியின் புத்தகமான ‘தி இங்கிலீஷ் பேஷண்ட்’ (ஆங்கில நோயாளி) என்ற புத்தகத்திற்கு ‘மேன் புக்கர் பரிசின்’ 50-வது ஆண்டை குறிக்கும் விதமாக சமீபத்தில் கோல்டன் மேன் புக் விருது வழங்கப்பட்டது.
  • சுவச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு இலட்சம் கழிப்பறைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளன.
    • இதன் மூலம் சிதமார்கி மாவட்டம் பீகார் மாநிலத்தில் முதலாவது திறந்த வெளிக் கழிப்பறையில்லா மாவட்டம் ஆகும் (Open Defecation Free). இந்தியாவில் சிதமார்கி மாவட்டம் 416-வது திறந்த வெளி கழிப்பறையில்லா மாவட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்