TNPSC Thervupettagam

1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A

October 25 , 2024 7 days 63 0
  • உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வானது, 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் 6A பிரிவின் அரசியலமைப்பு சார்பு தன்மையை உறுதி செய்துள்ளது.
  • வங்காளதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்து அசாம் மாநிலத்தில் குடியேறுபவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெற இது அனுமதிக்கிறது.
  • சகோதரத்துவக் கொள்கையை அசாமில் வாழும் ஒரு பிரிவினருக்கு மட்டுமென்று குறிப்பிட்டுப் பயன்படுத்தி விட்டு, அங்குள்ள மற்றொரு பிரிவினரை "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று குறிப்பிடப்பட முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியன்று அல்லது அதற்கு பிறகு அசாம் மாநிலத்தில் நுழைந்த புலம்பெயர்ந்தோர் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு திரும்ப அனுப்பப் படுவர்.
  • 6A பிரிவின் தோற்றுருவானது, 1985 ஆம் ஆண்டு அசாம் ஒப்பந்தம் என்ற ஒரு அரசியல் தீர்வின் மூலமாகும்.
  • இது 1966 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதிக்கு முன்னதாக வங்காளதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்குள் புலம்பெயர்ந்த மக்கள் இந்தியக் குடிமக்களாகக் கருதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
  • 1966 ஆம் ஆண்டு ஜனவரி 01 மற்றும் 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 என்ற காலகட்டத்திற்கு இடையில் மாநிலத்திற்குள் அசாம் மாநிலத்தில் நுழைந்தவர்களுக்கு சில குறிப்பிட்ட செயல்முறைகள் மற்றும் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும்.
  • எவ்வாறாயினும், இந்தப் பிரிவானது 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதிக்குப் பிறகு அசாம் மாநிலத்தில் நுழைந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதை தடை செய்து உள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதியன்று, பாகிஸ்தான் இராணுவம் ஆனது கிழக்கு பாகிஸ்தானில் எழுந்த வங்காள தேசியவாத இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சர்ச்லைட் நடவடிக்கையைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்