TNPSC Thervupettagam

1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம்

December 24 , 2024 2 days 65 0
  • மத்திய அரசானது, தேர்தல் ஆவணங்களின் ஒரு பிரிவினை பொதுமக்கள் அணுகுவதன் மீது கட்டுப்பாட்டினை விதிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகளை திருத்தியமைத்துள்ளது.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒரு முக்கியப் பரிந்துரையைத் தொடர்ந்து சட்டத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பின் மூலம் இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
  • முன்னதாக, 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் 93(2)(a) விதியில், "தேர்தல் தொடர்பான மற்ற அனைத்து ஆவணங்களும் பொது மக்களின் ஒரு மதிப்பாய்விற்கு உட்படுத்தப் படும்" என்று கூறப்பட்டது.
  • இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, தற்போது அது, "இந்த விதிகளில் குறிப்பிடப் பட்டுள்ள படி தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது மக்களின் பெரும் மதிப்பு ஆய்விற்கு உட்படுத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஹரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பகிருமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய வழிகாட்டுதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
  • 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் என்பவை 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்