1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப் படுகொலை மீதான பிரதிபலிப்பிற்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 07
April 9 , 2020 1694 days 402 0
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 அன்று ஐக்கிய நாடுகள் அமைப்புகளால் இது ஒரு சர்வதேச அனுசரிப்பாக அங்கீகரிக்கப் பட்டது.
8,00,000ற்கும் மேற்பட்ட டுட்சி இன மக்கள் ருவாண்டாவில் ஹுட்டு இனத்தின் தலைமையிலான ஒரு தீவிரவாத அமைப்பு அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலையில் கொல்லப் பட்டனர்.
டுட்சி இனமானது ருவாண்டா மற்றும் புருண்டியில் உள்ள 3 மிகப்பெரிய குழுக்களில் இரண்டாவது மிகப்பெரிய மக்கட்தொகைப் பிரிவாக விளங்குகின்றது. மற்ற இரண்டு குழுக்கள் ஹுட்டு (மிகப் பெரியது) மற்றும் துவா (சிறியது) ஆகும்.
டுட்சி என்பது ஆப்பிரிக்கப் பெரு ஏரிகள் நிலப் பகுதியில் உள்ள ஒரு சமூகப் பிரிவு அல்லது இனக் குழுவாகும்.
ஆப்பிரிக்கப் பெரு ஏரிகள் நிலப்பகுதி என்பது கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவுப் பள்ளத்தாக்கில் உள்ள மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிளவுப் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாக விளங்கும் ஏரிகளின் ஒரு தொடர் வரிசையாகும்.
இது பரப்பில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியான விக்டோரியா ஏரி, கொள்ளளவு மற்றும் ஆழத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான தங்கநாயகா ஏரி மற்றும் பரப்பில் உலகில் எட்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியான மலாவி ஏரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
புரூண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கென்யா, மலாவி, ருவாண்டா, தான்சானியா மற்றும் உகாண்டா ஆகியவை ஆப்பிரிக்கப் பெரு ஏரிகள் நிலப் பகுதியில் உள்ள நாடுகளாகும்.