TNPSC Thervupettagam

1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப் படுகொலை மீதான பிரதிபலிப்பிற்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 07

April 9 , 2020 1633 days 384 0
  • 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 அன்று ஐக்கிய நாடுகள் அமைப்புகளால் இது ஒரு  சர்வதேச அனுசரிப்பாக அங்கீகரிக்கப் பட்டது.
  • 8,00,000ற்கும் மேற்பட்ட டுட்சி இன மக்கள் ருவாண்டாவில் ஹுட்டு இனத்தின்  தலைமையிலான ஒரு தீவிரவாத அமைப்பு அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலையில் கொல்லப் பட்டனர்.
  • டுட்சி இனமானது ருவாண்டா மற்றும் புருண்டியில் உள்ள 3 மிகப்பெரிய குழுக்களில் இரண்டாவது மிகப்பெரிய மக்கட்தொகைப் பிரிவாக விளங்குகின்றது. மற்ற இரண்டு குழுக்கள் ஹுட்டு (மிகப் பெரியது) மற்றும் துவா (சிறியது) ஆகும்.
  • டுட்சி என்பது ஆப்பிரிக்கப் பெரு ஏரிகள் நிலப் பகுதியில் உள்ள ஒரு சமூகப் பிரிவு அல்லது இனக் குழுவாகும்.
  • ஆப்பிரிக்கப் பெரு ஏரிகள் நிலப்பகுதி என்பது கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவுப் பள்ளத்தாக்கில் உள்ள மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிளவுப் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாக விளங்கும் ஏரிகளின் ஒரு தொடர் வரிசையாகும்.
  • இது பரப்பில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியான விக்டோரியா ஏரி, கொள்ளளவு மற்றும் ஆழத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான தங்கநாயகா ஏரி மற்றும் பரப்பில் உலகில் எட்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியான மலாவி ஏரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 
  • புரூண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கென்யா, மலாவி, ருவாண்டா, தான்சானியா மற்றும் உகாண்டா ஆகியவை ஆப்பிரிக்கப் பெரு ஏரிகள் நிலப் பகுதியில் உள்ள நாடுகளாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்