2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி ஒட்டு மொத்தப் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில், நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டியில் இந்தியாவின் மிக அதிகப் பதக்கக் குவிப்பு இதுவாகும்.
இந்திய அணியானது 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் இந்தப் பதக்கப் பட்டியலில் இடம் பிடித்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒற்றைப் போட்டியில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற சீனா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தப் பதக்கப் பட்டியலில் இடம் பெற்ற நான்காவது நாடாக இந்தியா ஆனது.
1962 ஆம் ஆண்டில் ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்ததற்குப் பிறகு, தற்போது இந்திய அணி இந்தத் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி பேட்மிண்டன் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்களது முதல் பங்கேற்பில் தங்கள் முதல் தங்கப் பதக்கங்களை வென்று உள்ளன.