ஆப்பிள் நிறுவனம் ஆனது, 574.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் மீண்டும் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக இடம் பெற்றுள்ளது.
இதில் மைக்ரோசாப்ட் நிறுவனமானது, சுமார் 461 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் கூகிள் நிறுவனமானது 413.0 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற இதர நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
டிக் டாக் / டூயின் மற்றும் முகநூல் ஆகிய இரண்டும் 2024 ஆம் ஆண்டில் பெற்ற 7 மற்றும் 8 வது இடத்தை மீண்டும் பிடித்துள்ளன.
2014 ஆம் ஆண்டில் இந்தப் பட்டயலில் முதன்முதலில் மதிப்பிடப்பட்ட போது முன்னணி 500 நிறுவனங்களில் 424வது இடத்தைப் பிடித்த, NVIDIA நிறுவனம் ஆனது தற்போது முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் 132வது இடத்திலும், HDFC வங்கி 164 வது இடத்திலும் உள்ளன.
இதில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, WeChat நிறுவனம் ஆனது நிறுவன மதிப்பு வலிமைக் குறியீட்டுடன் உலகின் வலிமையான நிறுவனமாக உள்ளது.