L & T மெட்ரோ ரயில் ஹைதராபாத் லிமிடெட் நிறுவனமானது அண்மையில் 16 கி.மீ. உயர்த்தப்பட்ட மெட்ரோவை அமைத்துள்ளது.
இதன் மூலம் 3 தடங்களுடைய ஹைதராபாத் மெட்ரோ ரயில் (HMR) திட்டத்தின் ஒரு முழு நீளத்தை அந்நிறுவனம் நிறைவு செய்துள்ளது.
தற்போது, ஹைதராபாத் மெட்ரோ தடத்தின் மொத்த நீளம் 46 கி.மீ. ஆகும். இதன் மூலம் டெல்லி மெட்ரோவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய செயல்படும் மெட்ரோ இரயில் கட்டமைப்பாக ஹைதராபாத் மெட்ரோ உருவெடுத்துள்ளது.
இந்த HMR திட்டமானது உலகின் மிகப்பெரிய அரசு தனியார் கூட்டு (PPP – public Private Partnership) திட்டமாகும்.