யுனெஸ்கோவானது ஒடிசாவின் 2 கடலோரக் கிராமங்களை “சுனாமி தயார் நிலை கொண்ட கிராமங்கள்” என்று அங்கீகரித்துள்ளது. இது சுனாமியை எதிர்கொள்வதற்கு வேண்டி அந்தக் கிராமங்கள் உருவாக்கியுள்ள ஒட்டுமொத்த தயார் நிலைக்காக வழங்கப் பட்டுள்ளது.
வெங்கடராய்ப்பூர் மற்றும் நோலிஆசாகி ஆகியவை இந்த 2 கிராமங்களாகும்.
இந்த அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவின் முதலாவது மாநிலம் ஒடிசா ஆகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த அங்கீகாரத்தைப் பெறும் முதலாவது நாடு இந்தியா ஆகும்.